Followers

Saturday 24 March 2012

Far cry ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் கேம்

 
 



ஆக்‌ஷன் வீடியோ கேம் பிரியர்களை மிகவும் கவர்ந்த விளையாட்டு என்றால் அது Far Cry தான். System requirements மிகவும் குறைவாக உள்ள அதேவேளை அதி உச்ச கிராபிக்ஸ் நுட்பத்தையும் கொண்டது இந்த கேம்.

ஜாக் என பெயர் கொண்ட மாலுமி ஒருவன் ஊடகத்தை சேர்ந்த பெண் ஒருவரை தென் பசுபிக் இல் அமைந்துள்ள Micronesia என்னும் தீவுக்கு அழைத்து செல்கிறான். அந்த தீவின் அருகே தரித்து நிற்கும்போது அங்குள்ள ஆயுதக்குழுவினரால் அவனது படகு தாக்கி அழிக்கப்படுகிறது. ஊடகத்தை சேர்ந்த பெண் அக்குழுவினரால் கைது செய்யப்படுகிறாள். அதில் இருந்து தப்பும் ஜாக், அந்த தீவினுள் நுழைந்து அந்த பெண்ணை தேட ஆரம்பிக்கிறான்.
அதன் பின்னர் அந்த ஆயுதக்குழுவினருக்கும் ஜாக்கிற்கும் இடையில் நடக்கும் மோதலே இந்த Game இன் கதை.
2004 ஆம் ஆண்டு வெளியாகிய இந்த Game இல் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாமே மிகச்சிறந்தவை. பசுபிக் பிரதேசத்தில் உள்ள காடுகள் மூடிய தீவின் இயற்கை காட்சிகள், வித்தியாசமான குரங்குகள், காடுகளுக்குள் இடம்பெறும் மோதல்கள், படகு மோதல்கள், திடீர் திடீர் என பாய்ந்துவரும் சிறிய குரங்குகள், கைகளில் பாரிய ஆயுதங்களை தாங்கிய குரங்கு போன்ற விகாரமடைந்த மனிதர்கள் என ஏனைய ஆக்‌ஷன் Game களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டிருந்தது.

இந்த Game 2004 ஆம் ஆண்டு Crytek நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்டு Ubisoft இனால் வெளியிடப்பட்டிருந்தது. வெளியிட்டு 4 மாதங்களுக்குள் 730,000 பிரதிகளை விற்பனை செய்து சாதனை படைத்திருந்தது. இந்த Game இன் கதை 2008 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தளவு ஓடவில்லை.

அதன் பின்னர் இதன் இரண்டாம் பாகம் Far Cry 2 2008 ஆம் ஆண்டு Ubisoft நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னைய பாகத்தை போல் இரண்டாம் பாகம் சிறப்பாக அமையவில்லை. இருந்த போதிலும் 2009 ஆண்டு முடிவின் போது 2.9 மில்லியன் பிரதிகள் விற்பனையாகியிருந்தது.

இதன் அடுத்த பாகமான Far Cry 3 இந்த வருடத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியாகியிருந்த ட்ரெயிலரும், ஸ்கிரீன் சாட் களும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. இன்னும் எங்கள் நாட்டிற்கு இதன் பிரதிகள் விற்பனைக்கு வரவில்லை. ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த டெமோ வின் படி இதன் கதை, தீவு ஒன்றிற்கு சுற்றுலா வரும் ஜேசன் மற்றும் அவரது காதலியும் உள்ளூர் மோதலால் பிரிக்கப்படுகிறார்கள். இவ்வாறு பிரிக்கப்பட்ட ஜேசன் தன் காதலியை தேடிச்செல்கிறார். இங்கு Players ஜேசன் இன் காதாபாத்திரத்தை ஏற்று விளையாடுகிறார்கள்..

எங்கள் நாட்டிற்கு இன்னமும் இதன் பிரதிகள் வரவில்லை. டொரன்ரில் கூட பெற்றுக்கொள்ளமுடியவில்லை.

Far Cry தளம் செல்ல Far Cry
பேஸ்புக் பக்கம் Far Cry

ஆண்ட்ராய்டு மொபைலில் தமிழ் புத்தகங்கள்

 
 

இன்றைக்கு கைதொலைபேசி உலகை தன்வசம் வைத்து இருக்கும் ஆண்ட்ராய்டு மொபைலில் தமிழ் மென்புத்தகங்கள் குவிந்து கிடைக்கிறது. அவற்றில் இருந்து சில..,



கல்கியின் - பொன்னியின் செல்வன்

கல்கியின் - பார்த்திபன் கனவு

கல்கியின் - கள்வனின் காதலி

கல்கியின் - சிவகாமியின் சபதம்

கல்கியின் - பொய்மான் கரடு

கல்கியின் - தியாக பூமி

கல்கியின் - மோகினி தெரு

கல்கியின் - மகுடபதி

கல்கியின் - அலை ஓசை

கல்கியின் - சோலைமலை இளவரசி

கல்கியின் - சிறுகதை தொகுப்பு 1

வைரமுத்துவின் - தண்ணீர் தேசம்

ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பு


s60v5 Theme

Pico Vibrate Software

 

Pico Vibrate Software

After Pico Bells Lite, here is another cool and stylish application Vibrate by Pico Brothers Ltd. The application is very simple and it just On or Off your mobiles vibrator.

Just touch in the middle to the symbol shown in the picture and it will start vibrating your mobile. The vibration will only work if its already enabled in your personal profiles. Vibrateapplication allows you to choose between 7 vibration intervals.

Vibrate is a flash based application, in order to run this application, you need to have Flash Lite 3.1 installed on your mobile. See your mobile dance for you. Just download this app from the following link and enjoy it on your mobile.


Download Pico Vibrate Software

Popular Posts