Followers

Friday 21 October 2011

N9 - நோக்கியாவின் அதி நவீன சூப்பர் ஸ்மார்ட்போன்

 
 

மொபைல் போனில் செயல்படும் அதி நவீன தொழில் நுட்பங்கள் பலவற்றைக் கொண்ட மிகச் சிறந்த போனாக, நோக்கியா தன் என்9 (N9) ஸ்மார்ட் போனை வடிவமைத்துள்ளது. மீகோ (Meego) என அழைக்கப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனை, நோக்கியா நிறுவனம் பன்னாட்டளவில் விரைவில் அறிமுகம் செய்திட இருக்கிறது. இந்தியாவில் வரும் தீபாவளியை ஒட்டி இது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.

இன்டெல் நிறுவனத்தின் துணையுடன் வடிவமைக்கப்பட்ட என்9 ஸ்மார்ட் போன் மட்டுமே, மீகோ சிஸ்டத்தில் இயங்கும் போனாகும். இதில் 16ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவகை போன்கள், முறையே ரூ. 31,800 மற்றும் ரூ.37,200 என விலையிட்டு கிடைக்க இருக்கின்றன.

இந்த போனில் பட்டன்கள் இருக்காது. ஒரே பகுதியாக இதன் வடிவமைப்பு இருக்கும். இதன் பேட்டரியைக் கழட்ட முடியாது. இதில் மூன்று வகை இடைமுகம் இருக்கும். ஒவ்வொன்றும் ஒருவகை செயல்பாட்டுக்கு வழி தரும். இதன் மூலம் வேகமான இணைப்பு மற்றும் செயல்வேகம் கிடைக்கும்.

இதில் 3.9 அங்குல அகலத்திலான திரை தரப்பட்டுள்ளது. இத்திரை கீறல் விழ முடியாத, வளைவான கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் புறம் பாலி கார்பனேட்டினால் தயாரிக்கப் பட்டுள்ளதால், இதன் ஆன்டென்னா இயக்கம், அழைப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்படும் திறன் சிறப்பாக இயங்கும் என நோக்கியா அறிவித்துள்ளது.

இதன் கேமரா 8 மெகா பிக்ஸெல் கார்ல் ஸெய்ஸ் ஆட்டோ போகஸ் சென்சார் திறன் உள்ள அகலவகை லென்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் விரிதன்மை அகலமாகக் கிடைப்பதனால், மிகக் குறைந்த வெளிச்சத்திலும் இதனால் சிறப்பான போட்டோக்களை எடுக்க இயலும்.

இதில் இணைக்கப்பட்டுள்ள மேப் அப்ளிகேஷன் மூலம் வாகனத்தில் செல்கையிலும், நடக்கும் போதும், குரல் வழியாகவும், மேப் வழியாகவும் வழி நடத்தப்படுவோம்.

இதில் டோல்பி டிஜிட்டல் ப்ளஸ் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஹெட்செட் போட்டுக் கேட்டாலும், சரவுண்ட் ஸ்டீரியோ சவுண்ட் கிடைக்கும். உலக அளவில் இத்தகைய தொழில் நுட்பம் கொண்ட ஒரே ஸ்மார்ட் போன் இது என்று நோக்கியா அறிவித்துள்ளது.

அண்மையில் பிரபலமாகி வரும் அண்மைக் களத் தொடர்பு Near Field Communication தொழில் நுட்பமும், அதனுடன் இணைந்து செயல்படும் வயர்லெஸ் தொழில் நுட்பமும் இதில் தரப்படுகிறது. இதனால் இந்த தொழில் நுட்ப வசதி கொண்ட இரு சாதனங்களை அருகருகே வைப்பதன் மூலம் வீடியோ, படங்கள், பைல்கள் ஆகியவற்றை இரண்டிற்கும் இடையே பரிமாறிக் கொள்ளலாம்.

இணையவழி வர்த்தகம் மேற் கொண்டுள்ள இணைய வர்த்தக தளம், ஏற்கனவே இதற்கான ஆர்டர்களைச் சென்ற ஆகஸ்ட் முதல் பெற்று வந்தது. அப்போது இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.32,368 என அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அறிவிப்பு அத்தளத்தில் இல்லை.







------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !


No comments:

Post a Comment

Popular Posts